Saturday, October 11, 2014

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு கடிதம்!!

அன்புக்கும்,பெரு மதிப்புக்கும் உரிய சகோதரர் கி வீரமணி ஐய்யா அவர்களுக்கு,வாழ்த்துக்கள்.
இக்கடிதம் மூலம் உங்களை சந்திப்பதில் சந்தோஷம் கொள்ளும் ஒரு சகோதரின் மடல் இது.
ஐய்யா,உங்களின் பல வருட பிரச்சாரங்கள் மற்றும் நீங்கள் எழுதிய புத்தகங்கள் வாயிலாக நீங்கள் ஒரு நாத்திகர் என்பதை நான் அறிவேன்.

இஸ்லாத்தின் முதல் கொள்கை - "இறைவன் இல்லை,அல்லாஹ்வைத் தவிர"என்பதாகும்.எனவே,இஸ்லாத்தின் பாதிக் கொள்கையில் நீங்கள் உடன்பாடு கொண்டுள்ளீர்கள்.மீதியுள்ள கொள்கையாகிய "அல்லாஹ் மட்டுமே இறைவன் " என்பது மட்டுமே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய மீதியாகும்.

மற்ற மதங்களின் கடவுள் கொள்கைகளுக்கும்,இஸ்லாத்தின் கடவுள் கொள்கைகளுக்கும் பெருத்த வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இஸ்லாம்,எவ்வாறு சாமானிய மக்களுக்கும்,ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற மார்க்கம் என்பதை தாங்கள் அறியாதது அல்ல.

இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் கடைசி தூதராக உள்ள நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு ஒரு அழகிய முன் மாதிரி என்பதையும் தாங்கள் அறிந்துள்ள விடயமே.எல்லா விதமான கேள்விகள்,நடை முறைகளுக்கும் குர்ஆனிலும் - நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளிலும் விடைகள் இருக்கின்றன.

தந்தை பெரியார் அவர்களும்,நபிகள் நாயகம் பற்றியும்,இஸ்லாத்தின் கடவுள் கோட்பாடு பற்றியும் சொல்லிச் சென்றவைகள் தாங்கள் அறிந்தவையே.

திருக்குர் ஆனின் சில முன் அறிவிப்புக்கள்

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். அல்குர்ஆன் 5:67

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏரளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்ச்சிகள் நடந்தன.

அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கைவில்லை. குடிசையில் தான். வசித்தார்கள். வாயிற் காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்க்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

போர்க் களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. “உம்மை இறைவன் காப்பான்” என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.

இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிருபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.

இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான நிருபணம்.

என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதரணமாக உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்து போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.

அன்றைய நிலையில் இவரைப்போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறைவாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிருபித்தார்கள்.

பாதுகாக்கபட்ட ஃபிர்அவ்னின் உடல்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:92

திருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்த பின் ஃபிர்அவ்னின் உடலைக் கண்டெடுத்து எகிப்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.

ஃபிர்அவ்ன் மட்டுமின்றி அவனது படையினர் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டிருந்தும் திருக்குர்ஆன் கூறியவாறு அவனது உடல் மட்டும் மீட்கப்பட்டது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்கும் சான்றாகும். பார்க்க

நவீன வாகனங்கள் பற்றிய முன்அறிவிப்பு
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். அல்குர்ஆன் 16:8

இவ்வசனத்தில் மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்க்குப் பின் எத்தனையோ விதமான வாகனங்கள் படைக்கப்படவிருப்பதை முன் கூட்டியே அறிவிப்பதாக இது அமைந்துள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதற்கு இதையும் சான்றாகக் கொள்ளலாம்.

நபிகள் நாயகத்தின் (ஸல்) எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்
(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள். அல்குர்ஆன் 17:76

அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். அல்குர்ஆன் 54:45

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும், இவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள் என்று கூறப்படுகிறது.
வெற்றி பெறுவார்கள் என்பதற்க்கு எந்த அறிகுறியும் இல்லாத அந்தக் கால கட்டத்தில் இறைவனின் இந்த அறிவிப்பு சில வருடங்களிலேயே உண்மைப்படுத்தப்பட்டது.

திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஓன்றாகும்.

ரோம் சாம்ராஜ்யம் சில ஆண்டுகளில் வெற்றி பெறும்
ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள். அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். அல்குர்ஆன் 30:2-5

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது இரு வல்லரசுகள் இருந்தன. ஓரு வல்லரசு கிறித்தவர்கள் ஆளுகையிலிருந்த ரோமாபுரி சாம்ராஜ்யம். இன்னொரு வல்லரசு நெருப்பை வணங்கிக் கொண்டிருந்த பாரசீகர்களின் சாம்ராஜ்யம்.

நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் காலத்தில் இவ்விரு வல்லரசுகளும் மோதிக் கொண்ட போது ரோமாபுரி தோற்கடிக்கபட்டது. இதை நபிகள் நாயகத்தின் எதிரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
முஹம்மதைப் போலவே தங்களிடம் வேதம் இருக்கிறது என்று கூறிக் கொள்ளும் ரோமாபுரி சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது. நம்மைப் போலவே பல கடவுள்களை நம்பும் சமுதாயம் வெற்றி பெற்று விட்டது. எனவே முஹம்மதை நாம் தான் மிகைப்போம் என்று நபிகள் நாயகத்தின் எதிரிகள் பேசிக் கொண்டனர்.

அப்போது தான் மிகச் சில ஆண்டுகளில் ரோமாபுரி வெற்றி பெறும்; பாரசீகம் தோற்று ஓடும் என்று இவ்வசனங்கள் முன்னறிவிப்புச் செய்தன.

இந்த முன்னறிவிப்பின் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே ரோமாபரி வெற்றி, பாரசீகம் தோற்கடிப்பட்ட அதிசய நிகழ்ச்சியும் நடந்தேறியது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாக இது திகழ்கிறது.

மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்
(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 28:85

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.

இப்படி வெளியேற்றப்படும் ஒருவர் “வெளியேற்றிய ஊருக்கு வந்து அதை ஆள்வார்; அவருக்குச் சாதகமான நிலை ஏற்படும்” என யாரும் கற்பனை கூட செய்ய முடியாது.

ஆனால் இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்குப் புறப்பட்டதைப் பற்றிப் பேசும் போது எந்த இடத்தை விட்டு விரட்டினார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு செல்வேன் என்று முன்னறிவிப்பு செய்கிறது. இந்த முன்னறிவிப்பை உலகறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொன்னார்கள்.

சில வருடங்களிலேயே விரட்டப்பட்ட ஊருக்குச் சென்று அதை வெற்றி கொண்டு அவ்வூரைத் தம் வசப்படுத்திய இந்த நிகழ்ச்சியை, விரட்டப்படும் போதே திருக்குர்ஆன் முன்னறிவிப்பாகச் சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

அபூலஹபின் அழிவு
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). அல்குர்ஆன் 111:1-5.

இந்த அத்தியாயம் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையும், நபிகள் நாயகத்தின் முக்கிய எதிரியுமான
அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பத்தில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது நபிகள் நாயகத்தின் மீது மண்ணை வாரி வீசிய அபூலஹப் “இதற்காகத் தான் எங்களை அழைத்தாயா? நீ நாசமாகப் போ!” என்று கூறி தூற்றினான். அவனைக் கண்டிக்கும் விதமாகவே இந்த அத்தியாயம் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே அவனும், அவனுடைய மனைவியும், குடும்பத்தினரும் முழுமையாக அழிக்கப்பட்டு தடயமே இல்லாமல் ஆக்கப்பட்டார்கள்.

இதில் மிக முக்கியமான ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. “அபூலஹப் இஸ்லாத்தை ஏற்க மாட்டான். நரகத்திற்கே செல்வான்” என்று இந்த அத்தியாயம் பிரகடனம் செய்கிறது.

இஸ்லாத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அபூலஹப் இந்த அத்தியாயத்தைப் பொய்யாக்குவதற்காகவேனும் தானும் இஸ்லாத்தில் இணைவதாக நடித்திருக்கலாம். அவ்வாறு நடித்து இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டவாறு நிறைறேவில்லை. எனவே, முஹம்மது பொய்யர் என்று நிருபித்திருக்கலாம். ஆனால், கடைசி வரை அபூலஹப் எதிரியாகவே மரணித்திருப்பது இது இறைவனின் வேதம் என்பதற்கு சான்றாகும்.

உலகின் பல பகுதிகளிலிருந்து கனிகள் மக்காவிற்கு வந்து சேரும்
இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 28:57

இன்றைய மக்கா நகரம், நபிகள் நாயகம் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்வித கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாகும்.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் என திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்கிறது. இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காணமுடியும்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான கனி வகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
திருக்குர்ஆன் இறை வேதம் என்ற சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

விண்வெளிப் பயணம்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.” அல்குர்ஆன் 55:32-33

இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.
ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பணை செய்து கூட பார்திராத அந்த சமுதாயத்தில் முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை நிரூபித்துக் கொள்கிறது.

இன்னும் நிறைய இருக்கிறது.அதைப் பற்றி பேச இடம் பற்றாது.

தாங்களை நான் கேட்டுக் கொள்வது,தயவு செய்து - திருக் குரானை மனம் திறந்து படியுங்கள்.இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.வெற்றி பெறுவீர்கள்.
 (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.

(நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்.

திருக் குர்ஆன்
நன்றி ஐய்யா

Saturday, September 20, 2014

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்!ஐய்யா கி வீரமணி அவர்களுக்கு கடிதம்!!

Thursday, September 18, 2014

மன்னிப்பு

834. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒர துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது 'இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 BOOK :10

Wednesday, September 17, 2014

அல்லாஹ்வின் திருப் பெயரால்....

அன்புள்ளம் கொண்ட தமிழ் பேசும் சகோதர,சகோதரிகளுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தக் கடிதம்,இறைவன் நாடினால் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என எண்ணுகிறேன்.

இக் கடிதம்,இறைவன் அருளால், எல்லா நல்ல விஷயங்களையும் நாடியும்,பொல்லாத விஷயங்களை சாடியும் உங்களைத் தேடி வரும்.

இறைவன் நாடினால் தொடர்ந்து பார்ப்போம்.
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
,